மாதவிடாய் காலத்தில் உதிரபோக்கு சீரான அளவில் இருக்க வேண்டும். இது அதிகமாகவும் கூடாது, குறைவாகவும் இருக்க கூடாது. ஆனால் பல பெண்களுக்கும் இருக்கும் குழப்பம் அதிக உதிரபோக்கு இருப்பதை எப்படி கண்டறிவது என்பதுதான்.

ஒவ்வொரு மாதவிடாய் சுழற்சி காலங்களிலும் நீங்கள் நாப்கின் பயன்படுத்துபவராக இருக்கும் போது உதிரபோக்கு அளவை கவனித்தால் கண்டறிந்துவிட முடியும். தினமும் 4 நாப்கின் பயன்படுத்தும் போதும் அவை நனைந்து நீங்கள் வேறு நாப்கினை தேடும் போது அடுத்த மாதவிடாய் காலத்தில் இது அதிகமாகலாம். அதற்கடுத்த மாதங்களில் இன்னும் அதிகரிக்கலாம். இப்படி ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சி காலத்தில் உதிரபோக்கு அதிகமாக இருக்கும். மாதவிடாய் காலங்களில் எப்போதும் அதிகமான உதிரபோக்கு இருந்தால் அது மெனரோஜியா என்று மருத்துவத்துறையில் அழைக்கப்படுகீறது.

மாதவிடாய் காலத்தில் இரத்த போக்கு அதிகமாக இருப்பதை என்பதை எப்படி கண்டறிவது?

ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் கடுமையான இரத்த போக்கு இருக்கும் என்பதை எப்படி கண்டறிவது? மாதவிடாய் காலத்தில் ஒரு பெண் சராசரியாக 85 கிராம் இரத்தத்தை இழக்கிறார். ஆனால் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியான உதிரபோக்கு இருக்காது. உதிரபோக்கு அதிகமாக இருக்கும் போதெல்லாம் நாப்கின் ரத்தம் உறிஞ்சப்பட்டிருப்பதை பார்ப்பீர்கள். இது தொடரும் போது மருத்துவரை பார்க்க வேண்டியிருக்கும். எப்போதும் மாதவிடாய் காலங்களில் உதிரபோக்கு இப்படிதான் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஏனெனில் இது மெனரோஜியாவாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு மாதவிடாய் நாட்களும் ஏழு நாட்களுக்கு மேல் தொடர்ந்தால் உங்கள் மாதவிடாய் சுழற்சி ஒரு பிரச்சனையை உண்டு செய்கிறது என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் மாதவிடாய் காலங்களில் ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒரு முறை நாப்கினை மாற்ற வேண்டியிருக்கலாம். இரவு நேரங்களிலும் நாப்கின் ஈரம் உங்களை தொல்லை செய்து மாற்ற வேண்டியிருக்கலாம்.

ஒரு வாரத்துக்கும் மேலாக ரத்தபோக்கு இருந்து ரத்தகட்டிகளாக வெளியேறினாலும் நீங்கள் மெனரோஜியாவின் நிலையில் இருக்கவும் வாய்ப்புண்டு. மேலும் இந்த நாட்களில் வழ்க்கத்தை விட அதிக சோர்வு, மூச்சுத்திணறல் போன்ற ரத்த சோகையின் அறிகுறிகள் திவீரமாக இருக்கும். தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவதன் மூலம் இதை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம்.

மெனரோஜியாவுக்கு காரணங்கள்

கர்ப்பப்பை நார்த்திசுகட்டிகள், அடினோமையோசிஸ், ஃபைப்ராய்டு கட்டிகள் போன்றவை காரணங்களாக இருக்கலாம். வெகு அரிதாக சில நேரங்களில் என்ன காரணங்களால் இந்த உதிரபோக்கு உண்டாகிறது என்பது கண்டறிய முடிவதில்லை. எனினும் பொதுவான காரணங்கள்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வாக இருக்கலாம். ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சுழற்சியில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரான் என்னும் ஹார்மோன்கள் சமநிலையில் சுரக்க வேண்டும். இது எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பபையின் புறணி கட்டமைப்பை ஒழுங்குப்படுத்துகிறது. மாதவிடாய் காலத்தில் இவை சிந்தப்படுகிறது. இந்த சுரப்பில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் போது எண்டோமெட்ரியம் அதிகமாக உருகி மாதவிடாய் உதிரபோக்கு அதிக கனமாக இருக்கலாம்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம், உடல் பருமன், இன்சுலின் எதிர்ப்பு, தைராய்டு பிரச்சனைகள் உள்ளிட்ட பல நிலைமைகள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கு காரணங்களாகிறது. கர்ப்பப்பை செயலிழப்பு காரணமாகவும் மெனரோஜியா உண்டாகலாம். மாதவிடாய் சுழற்சியில் கருமுட்டை வெளியிடாத காலத்தில் உடல் மாதவிடாய் சுழற்சியின் போது புரோஜெஸ்டிரான் ஹார்மோனை உற்பத்தி செய்யாது. இதுவும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கு காரணமாகிறது.

கர்ப்பப்பையில் தீங்கு செய்யாத புற்றுநோயற்ற கட்டிகள் இருக்கும். கர்ப்பப்பை நார்த்திசுகட்டிகள் சாதாரண அல்லது நீடித்த உதிரபோக்கை உண்டாக்க கூடும். கர்ப்பப்பை பாலிப்ஸ் என்று சொல்லக்கூடிய தீங்கற்ற வளர்ச்சிகளாலும் நீடித்த மாதவிடாய் ரத்தபோக்கு இருக்கலாம்.

எண்டோமெட்ரியத்திலிருந்து கருப்பை தசைகள் பாதிக்கப்படும் போது அடினோமையோசிஸ் என்று சொல்லக்கூடிய நிலை உண்டாகலாம். இதனால் அதிக ரத்தபோக்கு வேதனையான மாதவிடாய் சுழற்சி காலம் இருக்கும்.

திருமணமானவர்களுக்கு மெனரோஜியா தாக்குதல் இருக்கும் போது அது வேறு அறிகுறிகளை கொண்டிருக்கும். இது கருவுறுதலில் சிக்கலை உண்டு செய்யும்.

மெனரோஜியாவின் ஆபத்து இளம்பெண்களுக்கு உண்டாகும் போது மெனரோஜியா அனோவ்லேஷன் காரணமாகிறது. முதல் மாதவிடாய் காலத்துக்கு பிறகு முதல் ஆண்டில் இந்த சுழற்சி உண்டாக கூடும்.

வயது அதிகமுள்ள பெண்களில் மெனரோஜியா கர்ப்பப்பை நோயியல் காரணமாக உண்டாகிறது. இது ஃபைப்ராய்டு, பாலிப்ஸ் மற்றும் அடினோமையோசிஸ் போன்ற காரணங்களால் உண்டாகலாம். வெகு தீவிரமாக இருந்தால் இது கர்ப்ப்பை புற்றுநோய், ரத்தபோக்கு கோளாறுகள், மருந்துகளால் ஏற்பட்ட பக்க விளைவுகள், வெகு அரிதாக கல்லீரல் அல்லது சிறுநீரக நோய் போன்ற பிற பிரச்சனைகள் காரணமாகவும் இருக்கலாம்.

மெனரோஜியாவை அலட்சியம் செய்தால் இது தீவிர ரத்தசோகையை உண்டு செய்யும். ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை குறைத்து ரத்த இழப்பு ரத்த சோகையை உண்டாக்கும். ரத்த சிவப்புஅணுக்கள் குறையும் போது உடலுக்கு போதிய ஆக்ஸிஜன் கிடைப்பது அரிதாகிறது. இதனால் உடல் சோர்வும் தீவிர இரும்புச்சத்து குறைபாடும் உண்டாகி இரத்த சோகை ஏற்படுகிறது. உணவு ஊட்டமின்மை காரணமாக உண்டாகும் இரும்புச்சத்து குறைபாடு ரத்தசோகையில் பங்கு வகிக்கிறது என்றால் மாதவிடாய் அதிகமாக வலுக்கும் போது அதனால் மேலும் சத்து குறைபாடு அதிகமாகிறது.

உதிரபோக்கு அதிகமாக இருக்கும் போது கடுமையான வலி, மாதவிடாய் பிடிப்புகள் உண்டாகும். இதுவும் தாங்க முடியாத வலியும் வேதனையும் தரும். மாதவிடாய் உதிரபோக்கு அதிகமாக வெளியேறும் போது மருத்துவரை அணுகுவதன் மூலம் சரியான காரணம் கண்டறிந்து உரிய சிகிச்சையின் மூலம் இதை கட்டுப்படுத்தலாம்.

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here