ஃபோலிகுலர் ஆய்வு என்றால் என்ன?
எத்தனை முறை ஃபோலிகுலர் ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கிறது?
யாருக்கு இந்த ஃபோலிகுலர் ஸ்கேன் அவசியம்?

கர்ப்பகாலத்தில் ஃபோலிகுலர் ஸ்கேன் குறித்து முழுமையாக அறிவோம்!

குழந்தைபேறு வேண்டும்  தம்பதியர் அதற்கான முயற்சிகள் தடைகள் இல்லாமல் ஆரோக்கியமாக நிகழ வேண்டும் என்னும் கால சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். கருத்தரிக்க முயற்சித்து இயலாத நிலையில் பெண் அண்டவிடுப்பை கண்காணித்து அந்த நேரத்தில் உறவு கொள்வதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். 

கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதியர் உரிய நாட்களுக்கு பிறகும் கருத்தரிப்பை கொள்ளாமல் இருக்கும் போது மருத்துவரை அணுகுவாரள். அப்போது அண்டவிடுப்பின் சுழற்சியை கண்காணிக்க ஒவ்வொரு மாதமும் ஃபோலிகுலர் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்படுவீர்கள். இந்த ஃபோலிகுலர் ஸ்கேன் ஏன் அவசியம் என்றழைகப்படுகிறது.

ஃபோலிகுலர் ஆய்வு என்றால் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.

ஃபோலிகுலர் ஆய்வு என்பது அண்டவிடுப்பின் போது கண்டறிய உதவும் எளிமையான ஸ்கேன் பரிசோதனை.  இது மாதவிடாய் கால சுழற்சியில் 9 ஆம்  நாளுக்கு பிறகு அண்டவிடுப்பு உண்டாகும் வரை தொடரும். இந்த முட்டை எப்போது வெளிவரும் என்பதை கணக்கிடுவதற்காக கருப்பையின்  நுண்ணறை வளர்ச்சியை மருத்துவர் ஆராய்வார். ஏனெனில் இந்த நேரத்தில் தம்பதியர் உடலுறவை திட்டமிட்டால் அது கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். 

இது சொல்வதற்கு எளிதாக இருந்தாலும்  உண்மையில் அப்படி இல்லை என்றே சொல்ல வேண்டும். 

ஆய்வுகளின் படி அல்ட்ராசவுண்ட் வழியாக மாதவிடாய் சுழற்சியை கண்காணித்தாலும் கருத்தரிக்க சில மாதங்கள் வரை  ஆக கூடும். அதனால் ஒரு சில மாதவிடாய் சுழற்சி வரை அண்டவிடுப்பை கண்காணிக்க உதவும். இந்த ஃபோலிகுலர் ஸ்கேன் என்னும் நுண்ணறை ஸ்கேன் என்றால் என்ன என்று பார்க்கலாம். 

இது அல்ட்ராசவுண்ட் யோனி ஸ்கேன்களின் தொடர்ச்சி ஆகும்.  இது அண்டவிடுப்பின் பொது வெளிப்படும் முட்டையை  காண்பிக்க உதவுகிறது. அதனால் இது  ஃபோலிகுலர் கண்காணிப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது கருத்தரிப்பதற்கான சிறந்த வாய்ப்பை பெறுவதற்கான  காலத்தை சொல்ல உதவுகிறது. 

இதை எப்போது செய்ய வேண்டும். ஒரு பெண் மாதவிடாய் சுழற்சியின் போது அதாவது சுழற்சிக்கு பிந்தைய 9  முதல் 20 நாட்களில்  பல முறை ஃபோலிகுலர் ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். இது வலியற்ற செயல்முறை. இதனால் கருப்பையில் இருக்கும் நுண்ணறை வளர்ச்சியை பார்க்க இவை உதவுகிறது. 

இது பெண் உறுப்பின் வழியாக  செய்யப்படும் பரிசோதனை ஆகும்.  சோனாகிராஃபர்கள் நுண்ணறைக்குள் முட்டையின் வளர்ச்சியை கண்காணிக்க உதவுகிறது. முட்டையை வெளியிடும் காலத்தை மட்டும் அல்லாமல் இதன் மூலம் மேலும் பல விஷயங்களை காணலாம். 

வளர்ச்சி குறைபாடான நுண்ணறைகள், முன்கூட்டியே சிதைந்த நுண்ணறைகள், கர்ப்பப்பை புறணிக்குள் முட்டையை பொருத்துதல் என எல்லாவற்றையும் இந்த பரிசோதனையின் மூலம் செய்ய முடியும். மேலும் இந்த பரிசோதனையின் மூலம் கருச்சிதைவு வரலாறு, ஐவிஎஃப் சிகிச்சை, அண்டவிடுப்பு குறைபாடு போன்றவற்றையும் அறிய முடியும். 

எத்தனை முறை இந்த ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கிறது?

ஒரு பெண்ணின் சாதாரண மாதவிடாய் சுழற்சியின் போது 4 ம் முதல் 6 முறை வரை  செய்ய அனுமதிக்கப்படுகிறது. அண்டவிடுப்பு சரியான காலத்தை உறுதி செய்யும் வரை இது செய்யப்படுகிறது. இந்த பரிசோதனைக்கு  அதிக நேரம் செலவிட வேண்டியதில்லை. 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆக கூடும். இது வலியில்லாத பரிசோதனை. அல்ட்ராசவுண்ட் சோதனை போன்றது. பரிசோதனையின் போது ஜெல் பயன்படுத்தப்படும். இது குளிர்ச்சியாகவும் சற்று அசெளகரியமாகவும் இருக்கும். வலி இருக்காது. யோனிக்குள் வைக்கும் போதும் எண்ணெய் பயன்படுத்துவதால் இது அசெளகரியங்களை உண்டாக்கும். வலி இருக்காது. 

யாருக்கு இந்த பரிசோதனை அவசியம்

35 வயதுக்கு முற்பட்ட பெண்கள், கருவுற முயற்சித்து ஒரு வருடம் வரை காத்திருந்தும் கருவுறுதலை சந்திக்காமல் இருந்தால் அவர்களுக்கு  இந்த ஃபோலிகுலர் ஆய்வு அவசியம் தேவை. ஏனெனில் இந்த பெண்ணுக்கு கர்ப்பப்பை குறைபாடு, பி.சி.ஓ.எஸ் போன்றவற்றை கொண்டிருந்தால் ஒழுங்கற்ற மாதவிடாய் இருக்கும். அதனால் அண்டவிடுப்பு சுழற்சி நடைபெறாமல் இருக்கும். 

ஐவிஎஃப் (IVF) என்னும் செயற்கை கருத்தரிப்பு நிகழ்வு அல்லது ஐயூஐ  என்னும் கருப்பையக கருவூட்டல்  நடைமுறைகள் மூலம் கருவுறுதல் மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டிருப்பவர்களுக்கும்  இது தேவைப்படும்.  

இந்த பரிசோதனையை எவ்வளவு காலம் வரை செய்ய வேண்டும் என்பதை மருத்துவர் தீர்மானிப்பார். கருத்தரிக்காத பெண்களுக்கு சிகிச்சை செய்யும் போது மாதவிடாய் சுழற்சிக்கு ஊக்கம் அளிப்பதற்காக கருவுறுதல் மருந்துகளை தருவார்கள்.  எத்தனை சுழற்சிகள் வரை தேவைப்படும் என்பதை மருத்துவரே தீர்மானிப்பார்.  அதே நேரம் கருவுற்தல் மருந்துகள் பயன்படுத்தி ஆறுமாதங்கள் கடந்தும் நீங்கள் கருத்தரிக்கவில்லை என்றால் அது கவனிக்க வேண்டிய விஷயமாகும். ஃபோலிகுலர் கண்காணிப்பின் போது பிரச்சனைகள் கண்டறியப்படும் என்றாலும் அது பெண்களின் வயதை பொறுத்தது. 

பொதுத்துறப்பு

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் ( Chennai Women’s Clinic and Scan Centre (CWC) ) வழங்கும் கட்டுரைகள், தகவல்கள், வீடியோக்கள் போன்றவை தகவல் தொடர்பு நோக்கங்களுக்காக மட்டுமே.

இவை எல்லாமே மகப்பேறு மருத்துவர்கள், ஸ்கேன் பரிசோதனை நிபுணர்கள், அதற்கான நடைமுறைகள் போன்றவை நிபுணர்களால் வழங்கப்படும் பொதுவான கட்டுரைகள் மட்டுமே.

எங்கள் இணையதளத்தில் இருக்கும் கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் பொதுவான விஷயங்கள் குறித்து மட்டுமே வழங்கப்படுகின்றன. வீடியோக்களில் இருக்கும் தகவல்களும் , கட்டுரைகளும் தனிப்பட்ட நபர்களுக்கான நோயறிதல் குறித்தவை என்று கருதக்கூடாது. அதனால் இதன் வாயிலாக வெளியிடப்படும் சிகிச்சை முறைகளை சுயமாக செய்து கொள்ள கூடாது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை தளத்தில் வெளியான கட்டுரைகள் மற்றும் வீடியோக்களின் மூலம் நோயறிதலையும், சிகிச்சையையும் சுயமாக செய்து கொள்ள கூடாது. மாறாக உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரின் ஆலோசனை செய்த பிறகு உரிய சிகிச்சை பெறுவது நல்லது.

சென்னை மகளிர் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் மையம் உருவாக்கும் ( இணையதளம் மற்றும் அச்சு) தகவல்கள் மருத்துவ ரீதியிலான பொதுவான கட்டுரைகள் மட்டுமே. எந்தவொரு தனி நபருக்கும் சிகிச்சையளிக்கும் வகையில் கட்டுரைகள் வெளியிடப்படவில்லை என்பதை உறுதி கூறுகிறோம். அதனால் தனிப்பட்ட முறையில் சுயமாக ஒருவர் சிகிச்சை கொள்வதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதையும் இத்தருணத்தில் உறுதி அளிக்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here