ஃபோலிகுலர் ஆய்வு என்றால் என்ன?

கருப்பையில் இருந்து விடுவிக்கக் காத்திருக்கும் லட்சக்கணக்கான முதிர்ச்சியற்ற முட்டைகளுடன் தான் ஒரு பெண்ணின் பிறக்கிறாள். அண்டவிடுப்பு (ovulation) முதிர்ந்த முட்டை ஃபலோபியன் குழாய் வழியாக வெளியாகிறது. இது கருத்தரிக்க தகுதி பெறுகிறது. விந்தணுவும் முட்டையும் இணைந்து ஒரு குழந்தையை உருவாக்குகின்றன. அதே காரணத்தை எதிர்நோக்கியே கருப்பை சுவர்கள் தடிமனாகிவிடுகின்றன. எந்த ஒரு கருத்தாக்கமும் ( கரு உருவாதகுக்கு உரிய உறவு முறை) ஏற்படாத நிலையில், கருப்பை புறணி ( uterine lining) மற்றும் ரத்தம் இரண்டும் மாதவிடாய் நடக்கும் போது வெளியேறிவிடுகின்றன.

வெறும் 12 முதல் 24 மணி நேரங்களுக்குள் மட்டுமே விந்தணுவால் முட்டையை கருத்தகரிக்கச் செய்ய இயலும். அதுவும் அண்டவிடுப்பின் சுழற்சியின் வாயிலாக விடுபட்ட முதிர்ச்சி அடைந்த முட்டையால் மட்டுமே கருத்தரிக்க முடியும். குழந்தைப் பேறுக்காக காத்திருக்கும் தம்பதிகள், அண்டவிடுப்பின் தருணத்தை உணர்ந்து அதற்கேற்றவாறு உறவுகொண்டால் பலன் கிடைக்கும்.

சீரான மாதவிடாய் சுழற்சியைக் கொண்ட பெரும்பாலான பெண்களுக்கு, சுழற்சியின் 11 மற்றும் 21-ம் நாட்களுக்கு இடையில் அண்டவிடுப்பு நடக்கும். இது மாதவிடாய் காலம் தொடங்கிய முதல் நாளில் இருந்து கணக்கு வைத்துக் கொள்ள வேண்டும். எனினும், இது தேவையில்லாத ஒன்று, பெரும்பாலான பெண்களுக்கு பல்வேறு தருணங்களில் அண்டவிடுப்பு நடக்கும் அல்லது ஒரு மாதத்தில் வெவ்வேறு நாட்களில் நடைபெறும். இதன் காரணமாகவே அண்டவிடுப்பு குறித்து அறிந்துகொள்ள மாதவிடாய் சுழற்சியை கவனிப்பது மிக முக்கியமாக உள்ளது.

பெண்ணுக்குரிய இனப்பெருக்க அமைப்பில் கருப்பை ஃபாலிக்கல்ஸ் எனப்படும் சிறியளவிலான திசுக்கள் உள்ளன. அவை அண்டவிடுப்பின் போது வெளியாகும் கருத்தரிப்பதற்கான உகந்த முட்டைகளை கொண்டிருக்கின்றன. ஃபாலிக்கல் என்பது திரவப் பகுதியாகும், அங்குதான் முட்டைகள் வளரும். முட்டை வளரும் போது, ஃபாலிக்கல்ஸின் அளவு அதிகரிக்கும். மாதவிடாய் சுழற்சி ஏற்படும் ஸ்கேனிங் செய்வதன் மூலம் கருப்பையின் நிலையை கண்டறிய முடிகிறது மற்றும் ஃபாலிகல்ஸின் அளவு அதிகரிப்பதையும் கவனிக்க முடிகிறது.

தாய்மை அடைய காத்திருக்கும் பெண் எப்போது அண்டவிடுப்பார் என்பதை தீர்மானிக்க உதவும் யோனி ஸ்கேன்களின் தொடர் இது. அண்டவிடுப்பு தயாரான முதிர்ச்சி அடைந்த முட்டைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் பாதுகாப்பை இந்த நடைமுறைகள் உறுதி செய்கின்றன. முட்டை முதிர்ச்சி அடைந்தவுடன், தம்பதிகள் திட்டமிட்டு உறவுகொள்ளலாம் அல்லது பெண்ணுக்குள் விந்தணுவை செலுத்துதல் அல்லது ஐ.வி.எஃப் சைக்கிள் போன்ற சிகிச்சைகளுக்கு தயாராகலாம். பொதுவாக சுழற்சி தொடங்கிய 9வது நாளுக்குள் இந்த ஸ்கேன் நடைமுறை துவங்கிவிடும். தொடர்ந்து 20-வது நாள் வரை நடக்கும். இது ஐவிஎஃப் போன்ற கருவுறுதல் சிகிச்சைகள் மூலம் கர்ப்பம் தரிப்பதற்கான ஒரு முக்கிய செயல்முறையாகும்.

ஃபோலிகுலர் ஆய்வினால் கிடைக்கும் பலன் என்ன?

முட்டையைக் கொண்டிருக்கும் கருப்பையில் செயல்படக்கூடிய ஃபாலிகல்ஸை கண்டறியவே ஃபோலிகுலர் ஆய்வு உதவுகிறது. உடனடியாக நடைபெறக்கூடிய அண்டவிடுப்பு கணிக்கப்பட்டு, கருத்தரித்தல் இயற்கையாகவே நிகழும். அதை தொடர்ந்து, அண்டவிடுப்பு நடக்கவிருக்கும் தருவாயில் கருத்தரிப்பதற்காக தம்பதிகள் உறவுக் கொள்ளலாம். ஏதேனும் கருவுறுதல் சிகிச்சையின் மூலம், கருத்தரிப்பதற்காக முயற்சி செய்யக்கூடியவர்களுக்கு இந்த ஸ்கேன் உதவி செய்கிறது. அதன்படி, ஃபாலிகல்ஸ் இருப்பதையும், கருத்தரிப்பதற்காக ஒரு முட்டையை பிரித்தெடுப்பதற்கான நேரத்தையும் தீர்மானிக்க இந்த ஸ்கேன் உதவுகிறது.

ஃபோலிகுலர்ஆய்வு எவ்வாறு செய்யப்படுகிறது?

டிரான்ஸ்வைஜனல் அல்ட்ராசவுண்டு வழியாக செய்யப்படும் ஃபோலிகுலர் ஆயிவில், கருப்பை ஃபாலிகல்ஸ் ஆராயப்படும். மேற்கொண்ட பகுப்பாய்வுக்கான உள் உறுப்புகளுக்கான படங்களும் கிடைக்கும். சிகிச்சைக்குரிய பிளாஸ்டிக் கருவியை பெண்ணுறுப்பில் செருகுவதன் மூலம் இந்த ஸ்கேன் செய்யப்படுகிறது. இதனால் முட்டை எப்போது வெளிப்படும் என்பதை மருத்துவரால் தோராயமாக கூற முடியும். கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்க அந்த நேரத்தில் தம்பதிகள் உடலுறவுக்கு திட்டமிடலாம். முட்டையை கொண்டிருக்கும் திசுக்கள் மற்றும் எண்டோமெட்ரியல் லைனிங் தடிமனாவது ஆகியவை பெண்ணின் அண்டவிடுப்பின் காலத்தை தீர்மானிக்க ஆய்வு செய்யப்படுகின்றன.

பொதுவாகவே இந்த ஃபோலிகுலர் ஆய்வு யாருக்கு செய்யப்பட வேண்டும்?

கருத்தரிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே ஃபாலிகல் ஸ்கேன் செய்யப்படும். எந்தவித கருத்தடை பொருட்களையும் பயன்படுத்தாமல் அதிகப்பட்சமாக ஓராண்டு வரை உடலுறவு கொண்டும் கருத்தரிக்காமல் இருப்பவர்களுக்கு இந்த ஸ்கேன் பரிந்துரைக்கப்படும். இந்த சிகிச்சைக்கு பெண்ணின் வயதும் கருத்தில் கொள்ளப்படும். 30-களின் பிற்பகுதியிலோ அல்லது 40 வயதிலோ இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு ஆரோக்கியத்துடன் கூடிய முட்டைகள் உருவாவது கிடையாது. சராசரியாக ஒரு பெண் 35 வயதை கடந்துவிட்ட பிறகு, அவருக்கான கருத்தரிக்கும் வாய்ப்புகள் சவாலாக அமைகின்றன. எனினும், ஃபோலிகுலர் சிகிச்சை முறைகள் சில பெண்களுக்கு நன்மை பயக்கும், அவர்கள்:
>எப்போது அண்டவிடுப்பு நடக்கிறது என்று தெரியாமல் இருக்கும் பெண்கள்.
>அண்டவிடுப்பு நடப்பது உறுதியாக தெரியாமல் இருக்கும் பெண்கள்; அண்டவிடுப்பின் போது கருப்பைக்கு அருகில் சிறிது வலி ஏற்படுவது அல்லது உடலின் சில இடங்களில் வேதனை ஏற்படுவது போன்ற அறிகுறிகளை உணராத பெண்கள்.
>அண்டவிடுப்பைத் தூண்டுவதற்குரிய மருந்துகளை உட்கொண்டு வரும் பெண்கள்.
என அறிகுறிகளை அறியாத பெண்களுக்கு இந்த ஸ்கேன் எடுப்பதன் மூலம் பெரிதும் உதவியாக இருக்கும்.

ஒரு ஃபாலிகல் ஸ்கேன் எடுக்க எவ்வளவு நேரம் ஆகும்?

பொதுவாக, ஃபோலிகுலர் டிராக்கிங் ஸ்கேன் எடுக்க அதிக நேரம் ஆகாது. 5 நிமிடங்கள் வரை ஆகும்.

ஒரு சுழற்சிக்கு எத்தனை ஸ்கேன் செய்யப்படுகின்றன?

அண்டவிடுப்புக்கான சாளரம் அகலமாக இருப்பதாக, ஒவ்வொரு சுழற்சியின் போதும் 8 முதல் 10 ஸ்கேன்கள் வரை தேவைப்படும். தொடக்க நிலை ஸ்கேன், ஃபாலிகல்லின் ஆரம்பக் கட்டத்தை அறிய உதவும். மேலும் அங்கிருந்து வளர்ச்சி உன்னிப்பாக கவனிக்கப்படும். அதற்கு ஏற்ப அடுத்த வரக்கூடிய ஸ்கேன் செய்யப்படும். இந்த சுழற்சி நடக்கும் போது ஃபாலிகல் வளர்ச்சி மற்றும் கருப்பைப் புறணி (womb lining) ஆகியவை கண்டறியப்படும். இந்த ஸ்கேன் மூலம் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் மிக தெளிவாக பார்க்க முடியும். ஆண்டவிடுப்பு நிகழக்கூடிய நேரத்தையும் தெரிந்துகொள்ள முடியும்.

ஃபோலிகுலர்ஸ்கேன் மூலமாக வேறு ஏதேனும் தெரிந்துகொள்ள முடியுமா?

அண்டவிடுப்பு விடுபடுவதற்கான நேரத்தை கண்டறிவதோடு இல்லாமல், கர்ப்பத்திற்கு இடையூறாக இருக்கும் சில சிக்கல்களை கண்டறியவும் ஃபோலிகுலர் ஸ்கேன் பயன்படும். என்ன மாதிரியான பிரச்சனைகளை கண்டறிய முடியும் என்பது குறித்து பார்க்கலாம்.
>சிதைவு ஏற்படுவதற்கு முன்னதாக சரியாக வளர்ச்சி பெறாத ஃபாலிகல்ஸ்களை தீர்மானிக்க இது உதவும்.
> ஃபோலிகுலர்வெளியீட்டுடன் இணைந்து கருப்பைப் புறணி தடித்து காணப்படுதல்.
>ஃபாலிகல்ஸ் வளரவில்லை அல்லது சரியான நேரத்தில் அது சிதைவுறவில்லை.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் வைத்து பிரச்னைக்குரிய காரணிகளை கண்டறிய மருத்துவரால் முடியும். இதன்மூலம் கர்ப்பம் நிகழ்வதற்கு தடையாக இருக்கும் சிக்கலை எளிதாக கண்டறிய முடிகிறது. அதை தொடர்ந்து முறையான சிகிச்சைகள் மற்றும் நடவடிக்கைகளை மருத்துவர்கள் மேற்கொள்வார்கள்.

ஃபோலிகுலர் ஸ்கேன் குறித்து உங்கள் கேள்விகள்

ஃபோலிகுலர் ஸ்கேன் மூலம் ஏதேனும் பக்க விளைவுகள் உள்ளதா? 

ஃபோலிகுலர் ஆய்வின் நேரடி பக்க விளைவுகள் எதுவும் இல்லை.

எந்த நாட்களில் ஃபோலிகுலர் ஆய்வு செய்யப்படுகிறது?

மாதவிடாய் சுழற்சியின் 8 முதல் 10 வது நாளில் ஃபோலிகுலர் ஸ்கேன் செய்யப்படுகிறது.

நுண்ணறையின் சாதாரண அளவு என்ன?

அண்டவிடுப்பின் முன், நுண்ணறையின் சராசரி விட்டம் 22 முதல் 24 மிமீ வரை இருக்கும்.

ஃபோலிகுலர் ஆய்வு கர்ப்பத்தை உறுதிப்படுத்த முடியுமா?

குழந்தையைத் திட்டமிடுவதில் ஃபோலிகுலர் ஸ்கேன் முக்கியமான படியாகும், ஏனெனில் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் நேரம் அண்டவிடுப்பின் காலம், ஃபோலிகுலர் கண்காணிப்பு மூலம் அண்டவிடுப்பை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

கர்ப்பமாக இருக்க நுண்ணறையின் அளவு என்னவாக இருக்க வேண்டும்?

நுண்ணறைகள் சுமார் 18-20 மிமீ விட்டத்தை அடைந்தவுடன் அவை முட்டை சேகரிப்புக்கு தயாராக இருப்பதாகக் கருதப்படும்.